பேர் மாத்துனா… பொருளாதாரம் உயர்ந்திடுமா?- விஷ்ணு விஷால் கேள்வி.

வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல்களம் சூடு பிடித்துள்ள நிலையில், இந்த முறை பிரதமர் நாற்காலியை காங்கிரஸ் பிடிக்குமா? அல்லது பாஜக நீடிக்குமா? என எதிர்பர்ப்பு நிலவி வருகிறது. அதற்கான பணிகளில் இருகட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் பல்வேறு மாநில கட்சிகளுடன் அனைத்த கூட்டணிக்கு ‘இந்தியா’ என பெயர் வைத்து பிரச்சாரத்தை துவங்கியது. இதனால் இந்தியாவிற்கு இந்தியா என என்ற பெயரை மாற்றி பாரத் என பெயரை வைக்க வேண்டும் என்று பாஜக கங்கனம் கட்டிக்கொண்டு வலம்வருகிறது.
இந்த விவகாரம் பூதாகரமாக மாற பலரும் தங்களது ஆதரவு மற்றும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஷணு விஷால் ‘இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றினால் என்ன நடக்கப்போகிறது, எந்த பலனும் இல்லை. இந்தியா எப்போதும் பாரத நாடு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதனால் பொருளாதார எந்த விதத்தில் உயரப்போகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.