கொடைக்கானலில் தொடங்கும் விஷ்ணு விஷாலின் அடுத்த பட ஷூட்டிங்... புதிய அப்டேட்

vishu vishal

 விஷ்ணு விஷால் மற்றும் ராம்குமார் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் விஷ்ணு விஷால். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யாவின் இயக்கத்தில் ‘லால் சலாம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. 

இதற்கிடையே ‌ 2018-ம் ஆண்டு ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான 'ராட்சசன்' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அந்தப் படத்தில் அமலா பால் கதாநாயகியாக நடித்திருந்தார். விஷ்ணு விஷாலின் சினிமா கேரியரில் மிக முக்கிய படமாக அமைந்தது ராட்சசன். இந்தியாவின் மிகச்சிறந்த சைக்கோ த்ரில்லர் படமாக இப்படம் அமைந்தது. 

vishu vishal

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மீண்டும் நடிக்கிறார். விஷ்ணு விஷாலின் 21வது படமாக உருவாகும் இந்த படத்தின் அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியானது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் காதல், காமெடி கலந்த ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாகிறது.  இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்க அதிதி ஷங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

சமீபத்தில் இப்படத்தின் ப்ரோமோவிற்கான படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. தற்போது அந்த படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் பகுதியில் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. இதற்கான பணிகளில் இயக்குனர் ராம்குமார் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Share this story