மொட்டை போட்ட விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட இயக்குனர் -எதனால் தெரியுமா ?
தமிழ் மற்றும் தெலுங்கில் இன்று திரைக்கு வந்துள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ என்ற படம் வெற்றிபெற வேண்டும் என்று, திருப்பதி கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்ட இயக்குனர் வெங்கி அட்லூரி, மொட்டை அடித்துக்கெண்டார். இப்படத்தில் சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். முன்னதாக நடந்த புரமோஷனில் சூர்யா பேசும்போது, ‘உங்கள் வாழ்க்கையை தொடங்கும்போது பணம், குடும்ப பின்புலம், திறமை என்று எதுவும் இல்லை என்றாலும் பரவாயில்லை.
ஆனால், உங்களை நீங்கள் முழுமையாக நம்ப வேண்டும். அப்படி நம்பினால், எல்லாமே நல்லதாக நடக்கும். மமிதா பைஜு அதைத்தான் செய்துள்ளார். திரையுலகில் அவர் ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக தனது பயணத்தை தொடங்கினார். இன்று ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ என்ற படத்தில் முதன்மை இடத்தை பிடித்துள்ளார். இதற்காக அவரை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும்’ என்றார்.

