இந்தியில் ரீமேக்காகும் 'விஸ்வாசம்'.. அஜித் கேரக்டரில் நடிக்க போட்டுப்போடும் பாலிவுட் பிரபலங்கள் !
இந்தியில் ரீமேக்காகும் 'விஸ்வாசம்' படத்தில் நடிக்க பாலிவுட்டில் இரு நடிகர்கள் போட்டியிட்டு வருகின்றனர்.
தந்தை மற்றும் மகள் பாசப்போராட்டத்தை மையமாக வைத்து உருவான திரைப்படம் 'விஸ்வாசம்'. கடந்த 2019-ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டடித்தது. இந்த சிறுத்தை சிவா இயக்கினார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். ஜெகபதி பாபு வில்லனாக நடித்திருந்த இந்த படத்தில் தம்பிராமையா, விவேக், யோகிபாபு, கோவை சரளா, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்த இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டடித்தது. அஜித்துக்கு கமர்ஷியல் ஹிட் கொடுத்த இப்படம் உலகம் முழுவதும் வசூலை வாரி குவித்தது. மனைவி, மகளை பிரிந்த கதாநாயன் எப்படி கடைசியில் இணைகிறார் என்பதை சென்டிமெண்ட் கலந்து கொடுத்து ரசிகர்களின் வரவேற்பை பெற்ற படம் இப்படம். இந்த படத்தில் டி இமான் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் மாபெரும் வெற்றியை பெற்றது.

தற்போது இப்படம் இந்தியில் ரீமேக்காக உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் அஜித் கேரக்டரில் நடிக்க பாலிட்டில் நடிக்க இருபெரும் நடிகர்களான அஜய் தேவ்கான் மற்றும் அக்ஷய் குமார் ஆகிய இருவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். விரைவில் ஒருவர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

