மீண்டும் ‘சதீஷ்’ ஹீரோவாக நடிக்கும் ‘வித்தைக்காரன்’- மோஷன் போஸ்டர் வெளியீடு.

poster

காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடித்துள்ள ‘வித்தைக்காரன்’ படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு படக்குழுவுக்கு வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.

photo

படங்களில் காமெடி கேரக்டர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சதீஷ். இவர் முதன்முதலாக ஹீரோவாக நடித்த திரைப்படம் ‘நாய் சேகர்’  ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்த இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.  தொடர்ந்து அவர் மீண்டும் ஹீரோவாக நடிக்க உள்ள திரைப்படம் ‘வித்தைக்காரன்’. அதன் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாக உள்ளது.  இதில் கதாநாயகியாக சிம்ரன் குப்தா  நடிக்க ஆனந்தராஜ், ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

செஸ் விளையாட்டை மைய்யமாக வைத்து தயாராகவுள்ள இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய வெங்கி இயக்குகிறார். இந்தப் படத்துக்கு யுவ கார்த்திக் ஒளிப்பதிவு செய்ய, விபிஆர் இசையமைக்கிறார். விஜய் பாண்டி தயாரிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this story