செஸ் விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் ‘வித்தைக்காரன்’.. சதீஷ் அடுத்த படத்தின் அறிவிப்பு !

Vithaikkaaran

சதீஷ் நடிப்பில் உருவாகும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக இருப்பவர் சதீஷ். முன்னணி நடிகர்களின்‌ திரைப்படங்களில் காமெடியனாக நடித்து வந்த சதீஷ், தற்போது ஹீரோவாக நடிக்க ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான 'நாய் சேகர்' படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். 

இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் இரண்டாவதாக ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராக பணியாற்றிய வெங்கி என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் சதீஷுக்கு ஜோடியாக சிம்ரன் குப்தா நடித்து வருகிறார். 

Vithaikkaaran

இவர்களுடன் ஆனந்த்ராஜ், ஜான் விஜய், ரமேஷ் திலக், தங்கதுரை, மதுசூதனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு யுவா ஒளிப்பதிவு செய்ய, விபிஆர் இசையமைத்து வருகிறார். சித்தார்த் படத்தொகுப்பாளராகவும், ஜி துரைராஜ் கலை இயக்குனராகவும் பணியாற்றி வருகின்றனர். 

இந்த படத்தை வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரித்து வருகிறார். செஸ் விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தின் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘வித்தைக்காரன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் வரவேற்பை பெற்றுள்ளது. 

 

 

Share this story