விஜய் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் அப்டேட்கள்

விஜய் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் அப்டேட்கள்

செப் 30-ம் தேதி 'லியோ' இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ள நிலையில் அடுத்த  அக்டோபர் முதல் வாரத்திலே  விஜய் நடிக்கும் 68 -வது திரைப்படத்தின் பூஜையை நடத்த  படக்குழு திட்டமிட்டுள்ளது. 

விஜய் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் அப்டேட்கள்

லலித் குமார் தயாரிப்பில் நடிகர் விஜயின் 67-வது படமான 'லியோ' திரைப்படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ்  இப்படத்தை இயக்க அனிருத் இசையமைக்கிறார். 14 ஆண்டுகள் கழித்து விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கும் நிலையில் சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அக்டோபர் 19ம் தேதி இத்திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் செப்டம்பர் 30-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகப் பிரம்மாண்டமாக லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. அதே சமயம், விஜயின் அடுத்த படமான தளபதி68 படத்தின் பூஜையும் அடுத்த நாளே நடைபெற உள்ளது. அடுத்தடுத்து நடிகர் விஜய் படத்தின் தகவல் வெளியாகி உள்ளதால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Share this story