‘வால்டர் வீரய்யா’ இயக்குனருடன் கைகோர்க்கும் சூப்பர் ஸ்டார்.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல் !

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். ஜெயில் கதைக்களம் கொண்ட இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் நிறைவுபெற உள்ளது.
இந்த படத்தையடுத்து ரஜினியின் 170வது படத்தை ‘ஜெய் பீம்’ படத்தின் மூலம் பிரபலமான டி.ஜே.ஞானவேல் இயக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. லைக்கா நிறுவனம் பிரம்மாண்ட தயாரிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கவுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் சிரஞ்சீவி நடிப்பில் சூப்பர் ஹிட்டடித்த ‘வால்டர் வீரய்யா’ இயக்குனர் பாபி இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை தில் ராஜூ தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரே நேரத்தில் டிஜே ஞானவேல் மற்றும் பாபி ஆகிய இருவர் இயக்கத்திலும் ரஜினி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.