'வார் 2' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு...!

ஹிருத்திக் ரோஷன்- ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள 'வார் 2' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலிவுட்டின் முன்னணி சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வருபவர் ஹிருத்திக் ரோஷன். இவர் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான படம் 'வார்'. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் ஹிருத்திக் ரோஷனுடன் டைகர் ஷ்ராப் மற்றும் வாணி கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
அதனையடுத்து, யாஷ் ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் 'வார் 2' படத்தை தயாரித்து வருகிறது. இந்தப்படத்தில் ஹிருத்திக் ரோஷன் மீண்டும் மேஜர் கபீர் தலிவாலாக நடிக்கிறார். இந்த படத்தை 'பிரம்மாஸ்திரா' பட இயக்குனர் அயன் முகர்ஜி இயக்குகிறார். ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் கியாரா அத்வானி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
Must say… you have set it up brilliantly even before we have started our marketing of #War2 🔥😎💥😱💪 ... there will be mayhem in cinemas on 14 August 2025, worldwide… 😈⚠️‼️🚨🤯 https://t.co/eVmQRLLJtG
— Yash Raj Films (@yrf) March 16, 2025
null
இந்த நிலையில், வார் 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி வெளியாக இருக்கிறது.