அம்மாவுடன் ’எம்.குமரன் S/O மகாலட்சுமி’ படத்தை பாருங்க...: இயக்குநர் மோகன் ராஜா

mohan raja

ஜெயம் ரவி, அசின், நதியா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான ’எம்.குமரன் S/O மகாலட்சுமி’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரீரிலீஸ் ஆனது. 

2004-ம் ஆண்டு இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி அசின், நதியா, பிரகாஷ் ராஜ் மற்றும் விவேக் ஆகியோர் நடிப்பில் 'எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி' திரைப்படம்.  இந்தப் படம் வெளியானபோது நல்ல வரவேற்பை பெற்றுது. வசூல் ரீதியிலாகவும் நல்ல வெற்றி  திரைப்படமாக இருந்தது. ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் ஹிட்.  


 இந்நிலையில், ’எம்.குமரன் S/O மகாலட்சுமி’ திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகியுள்ளதால், மீண்டும் ரீ - ரிலீஸ் ஆகியுள்ளது. அதுதொடர்பாக இயக்குநர் மோகன் ராஜா வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், இளைஞர்கள், பெண்கள், குறிப்பா அம்மாக்களுக்குப் இந்த படம் பிடித்துப்போனது. அவர்களுக்கு Close to Heart படம் இது. இளைஞர்கள் ரீரிலீஸ் டிரெண்ட் உருவாக்கி சினிமாவை கொண்டாடினீங்க. உங்களுக்கு ஒரு கோரிக்கை. இந்தப் படத்தை அம்மாக்களுடன் குடும்பத்தினருடன் சென்று பாருங்க. திரையரங்குகளில் சென்று பார்க்கும்போது அவர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும். “ என்று தெரிவித்திருக்கிறார். 

 

Share this story