இந்த உலகையே மாற்றிவிடலாம் - சமந்தா

இந்த உலகையே மாற்றிவிடலாம் -  சமந்தா

தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவரான சமந்தா நடிப்பில் கடைசியாக வெளியான படம் குஷி, விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா இணைந்து நடித்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடந்து தனது சரும அலர்ஜிக்காக சிகிச்சை எடுக்க சினிமாவிலிருந்து சில காலம் சமந்தா விலகப்போவதாக தகவல் பரவியது. அதற்கு ஏற்றார் போல  சமந்தாவும் பல நாடுகளுக்கு சென்று புகைப்படம் எடுத்து வெளியிட்டு வருகிறார். ஆங்கிலத்தில் மற்றும் இந்தியில் அவர் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். 

இந்த உலகையே மாற்றிவிடலாம் -  சமந்தா

இந்நிலையில், ஹைதராபாத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு சமந்தா சென்றிருந்தார். அங்குள்ள குழந்தைகளுடன் பேசி விளையாடி மகிழ்ந்தார். அங்கு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்த அவர், குழந்தைகளுடன் பொழுதை கழிக்கும்போது நல்ல விஷயங்கள் கிடைப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், ஒரு பேனா, ஒரு குழந்தை, ஒரு ஆசிரியர் இருந்தால் உலகை மாற்றிவிடலாம் என தெரிவித்துள்ளார். 

Share this story