ஊழலை பொறுத்துக்கொள்ள மாட்டோம் - விஷால் பதிவுக்கு மத்திய அரசு கருத்து

ஊழலை பொறுத்துக்கொள்ள மாட்டோம் - விஷால் பதிவுக்கு மத்திய அரசு கருத்து

நடிகர் விஷால் நடிப்பில் கடந்த 15ஆம் தேதி  வெளியான படம் ‘மார்க் ஆண்டனி’. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டையாடி வரும் நிலையில், நடிகர் விஷால் சென்சார் போர்டு ‘மார்க் ஆண்டனி’ படத்திற்கு லஞ்சமாக ரூ.6.5 லட்சம் கேட்டதாக குற்றம் சாட்டினர். 

அது தொடர்பான வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். அதில், மும்பை சென்சார் போர்டு மோசமாக நடிப்பதாகவும், மார்க் ஆண்டனி படத்தின் இந்தி பதிப்பை வெளியிட ரூ.3 லட்சமும், சான்றிதழ் பெற ரூ.3.5 லட்சமும் லஞ்சமாக கேட்டதாக புகார் தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், நடிகர் விஷாலின் குற்றச்சாட்டுக்கு, ஒன்றிய அரசு பதில் அளித்துள்ளது. இது போன்ற ஊழலை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும், யார் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த ஒருவர் மும்பை அனுப்பப்படுவார் என்றும் குறிப்பிட்டுள்ளது. 


 

Share this story