கள்வன் படத்திற்காக கடுமையாக உழைத்தோம் - இயக்குநர்

கள்வன் படத்திற்காக கடுமையாக உழைத்தோம் - இயக்குநர் 

ஜி.வி. பிரகாஷ் ஹீரோவாக நடித்து, ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி ஜி. தில்லி பாபு தயாரிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘கள்வன்’. பிவி சங்கர் 'கள்வன்' படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் ஒளிப்பதிவும் செய்துள்ளார்.  ஜிவி. பிரகாஷ்ஷுடன் இணைந்து இந்த படத்தில் இவானா கதாநாயகியாக நடித்துள்ளனர். பாலா இயக்கத்தில் வெளியான 'நாச்சியார்' படத்தில் ஒன்றாக இணைந்து நடித்ததற்கு பிறகு ஜிவி பிரகாஷ் மற்றும் இவானா இந்தப் படத்தில் நடிக்கின்றனர். இவர்களளோடு இணைந்து இந்த படத்தில் தீனா, ஜி. ஞானசம்பந்தம், வினோத் முன்னா இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கமெடி அட்வென்சர் படமாக தயாராகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு  முடிந்து போஸ்ட புரொடக்க்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து  வருகிறது.

கள்வன் படத்திற்காக கடுமையாக உழைத்தோம் - இயக்குநர் 

இந்நிலையில், இத்திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் ஷங்கர், இப்படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளோம். தினந்தினம் மலை ஏறிச் சென்று படப்பிடிப்பை நடத்தினோம். இத்திரைப்படம் ஜிவி பிரகாஷ் திரை வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் என தெரிவித்துள்ளார். 

Share this story