திருமண வதந்திகள்... கொதித்தெழுந்த சாய்பல்லவி

திருமண வதந்திகள்... கொதித்தெழுந்த சாய்பல்லவி

சாய்பல்லவியின் வேலையின்றி தேவையில்லாமல் வதந்திகளை பரப்புவது ஒரு இழிவான செயல் என்று நடிகை சாய்பல்லவி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்

கடந்த 2015-ம் ஆண்டில் வெளியான 'பிரேமம்'  திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி, முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சாய்பல்லவி. 2017-ம் ஆண்டு 'கரு' என்ற படத்தின் மூலம் தமிழில் இவர் அறிமுகமானார். 'மாரி 2', 'என்ஜிகே', 'கார்கி' உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என அடுத்தடுத்து பல திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து, சாய் பல்லவி , இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் புதிய படத்தில் ஒப்பந்தமாகினார். இந்நிலையில், அத்திரைப்படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை, திருமண புகைப்படம் போல சித்தரித்து சமூக வலைதளங்களில் சிலர் பகிர்ந்து வந்தனர். 


இந்நிலையில், திருமண வதந்தி குறித்து நடிகை சாய்பல்லவி டிவிட்டரில் காட்டமாக பதிவிட்டுள்ளார். அதில், பெரும்பாலும் வதந்திகளை தான் பொருட்படுத்த மாட்டேன் என்றும், ஆனால் நல்ல உறவுகளுக்காக பேச வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும், இது வேலையில்லாமல் தேவையின்றி செய்யும் இழிவான செயல் என்றும் அவர் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார். 
 

Share this story