‘தண்டேல்’ படத்துக்கு வரவேற்பு... 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

thandel

உலகளவில் ‘தண்டேல்’ திரைப்படம் 2 நாட்களில் ரூ.41.20 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது.

சந்து மொண்டேட்டி இயக்கத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தண்டேல்’. கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் உலகமெங்கும் பிப்ரவரி 7ம் தேதி வெளியானது. இப்படத்துக்கு ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆனால் தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை. thandel

உலகளவில் முதல் நாளில் ரூ.21 கோடியும், இரண்டு நாட்கள் வசூல் மொத்தமாக 41.20 கோடி செய்திருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. இந்த வசூல் நிலவரத்தினால் படக்குழு பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது. மேலும், இந்த வரவேற்பினால் ஆந்திராவில் திரையரங்குகளுக்கு படக்குழுவினர் சென்று வருகிறார்கள்.

‘தண்டேல்’ படத்தின் கதை உண்மைச் சம்பவத்தினை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாகும். இதன் பாடல்கள் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், தொடர்ச்சியாக வசூல் அதிகரித்து வருவதால் விரைவில் ரூ.100 கோடி வசூலை தொடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு.

Share this story