"ஆரவாரமா ஆரம்பிக்கிறோம் மாமே... " குட் பேட் அக்லி குறித்து ஜி.வி. பிரகாஷ் டிவீட்...!

gvp

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 7.03 மணிக்கு வெளியாக உள்ளது.  

 ‘விடாமுயற்சி’ படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, யோகிபாபு, சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். .இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளது  



அண்மையில் இந்தப் படத்தில் நடிக்கும் த்ரிஷாவின் கதாபாத்திர வீடியோ வெளியானது. அதில் ரம்யா என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார்.    இந்நிலையில் இந்தப் படத்தின் டீசர் நாளை (பிப்.28) மாலை 7.03 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டீசரின் நீளம் 1.34 நிமிடங்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.   


இந்த நிலையில், டீசர் வெளியீட்டை ஒட்டி இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "ஆரவாரமா ஆரம்பிக்கிறோம் இன்னைக்கு மாமே.. ஜி.பி.யு. உலகில் இன்னைக்கு நம்ம அடிஷன்.. யுனிவர்ஸ்-க்கு நன்றி," என குறிப்பிட்டுள்ளார்.

Share this story