என்னங்க சொல்றீங்க...இந்த படத்தின் கதை யூடியூப் வீடியோவின் காப்பியா?

1

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நக்கலைட்ஸ் என்ற யூடியூப் பக்கத்தில் வெளியான ’பாய் பிரண்டு அலப்பறைகள்’ என்ற வீடியோவின் கன்டென்ட் தான் குருவாயூர் அம்பல நடையில் படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து குருவாயூர் அம்பலநடை’ படக்குழுவினர்களுக்கு நக்கலைட் சார்பில் கடிதம் எழுதப்பட்டதாகவும், ஆனால் அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும் படம் ஓடிடியில் வெளியான பிறகு பல பொதுமக்களே இந்த கேள்வியை கேட்க ஆரம்பித்து விட்டனர் என்றும் நக்கலைட்ஸ் யூடியூப் சேனலில் வந்த கதையை தான் கொஞ்சம் பட்டி டிங்கரிங் செய்து படமாக எடுத்திருக்கிறார்கள் என்று சொல்ல ஆரம்பித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த வீடியோ உட்பட பல வீடியோக்களை திரைப்படமாக எடுக்க நக்கலைட் திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது தங்களுடைய வீடியோவை வேறொருவர் திரைப்படமாக எடுத்து விட்டதால் இதை சட்டரீதியாக அணுக இருப்பதாகவும் கூறியுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Share this story