நடிகர் விஜய் கூறியது என்ன ? இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி பகிர்வு

rajkumar

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் தீபாவளி வெளியீட்டில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.நடிகர் சிவகார்த்திகேயனின் அதிக வசூல் படமாக சாதனை படைத்ததுடன் படத்தை தயாரித்த நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்ட ரெட் ஜெயண்ட் நிறுவனம் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு மிகவும் லாபகரமான வணிகத்தைக் கொடுத்திருக்கிறது.

vijay
தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ. 150 கோடியையும் உலகளவில் ரூ. 300 கோடியையும் வசூலித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
அமரன் திரைப்படத்தை நடிகர் விஜய் பாராட்டியிருந்தார். விஜய் என்ன கூறினார் என்பதை நேர்காணல் ஒன்றில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேசியதாவது:
அமரன் படம் முன்பே வெளியாகி இருந்தால் நாம் இணைந்து பணியாற்றி இருக்கலாம். ஆனால், தற்போது நிலைமை வேறுமாதிரி இருக்கிறது. நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது படத்தைப் பற்றி உலகமே சொல்கிறது. உன்னை நினைத்து மிகவும் பெருமையாக இருக்கிறது என விஜய் கூறியதாகக் கூறினார்.



பின்னர் இருவரும் சில வருடங்களுக்கு முன்பு எடுத்த புகைப்படத்தினை பார்த்து ரசித்ததாகவும் புதிய புகைப்படம் ஒன்றினை எடுத்ததாகவும் கூறினார்.
நடிகர் விஜய் தனது கடைசி படமான தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். அடுத்து அரசியலில் ஈடுபடவிருக்கிறார். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தனுஷுடன் இணைந்து புதிய படத்தை இயக்குவது குறிப்பிடத்தக்கது

Share this story