வீர தீர சூரன் படத்தின் வசூல் நிலவரம் என்ன...?

vikram

நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான வீர தீர சூரன் படத்தின் 5 நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 


சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் நடிபில் வெளியான படம் வீர தீர சூரன். இந்த திரைப்படம் மார்ச் 27 அன்று பல சிக்கல்களை கடந்து மாலையில் வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வீர தீர சூரன் திரைப்படம் வெளியான கடந்த 5 நாட்களில் தமிழகத்தில் சுமார் 34 கோடி வரை வசூலித்துள்ளது. படம் வெளியான முதல் முதல் நாள் சுமார் 3.90 கோடியும், இரண்டாம் நாள் 7.80 கோடியும், மூன்றாம் நாள் சுமார் 8 கோடியும், 4 ஆம் நாள் 8.34 கோடியும், ஐந்தாம் நாள் சுமார் 6 கோடி சேர்த்து மொத்தம் 34 கோடி வரை தமிழகத்தில் வசூலித்துள்ளது.vikram

பைவ் ஸ்டார் செந்தில் இந்த திரைப்படத்தின் தமிழக உரிமையை சுமார் 22 கோடிக்கு வாங்கியுள்ளார். இதனால் இந்த திரைப்படத்தை வாங்கியவருக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் தமிழகத்தில் லாபகரமான படமாக அமையும் என்பதே பொதுவான கருத்தாக நிலவுகிறது. அதுமட்டுமில்லாமல் உலகம் முழுவது சேர்த்து இந்த திரைப்படம் சுமார் 45 கோடி ரூபாய் வரை வசூலை ஈட்டியுள்ளது.

Share this story

News Hub