பெரும் எதிர்பார்ப்பில் ‘தெறி’ இந்தி ரீமேக் - காரணம் என்ன?

baby john

‘தெறி’ இந்தி ரீமேக்கான ‘பேபி ஜான்’ படத்துக்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த படம் ‘தெறி’. இந்தப் படம் மாபெரும் வரவேற்பினைப் பெற்றது. தற்போது இதன் இந்தி ரீமேக்கில் வருண் தவான் நாயகனாக நடித்துள்ளார். அட்லியிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த காலீஸ் இயக்கியுள்ளார்.

‘பேபி ஜான்’ படத்தினை முரத் கேட்டானி, ஜோதி தேஷ்பாண்டே மற்றும் ப்ரியா அட்லி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார். இதில் கீர்த்தி சுரேஷ், வாமிகா காபி, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் வருண் தவான் உடன் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக தமன் பணிபுரிந்துள்ளார். இந்தப் படத்தின் 6 நிமிடக் காட்சிகளை விநியோகஸ்தர்களுக்கு திரையிட்டு காட்டியிருக்கிறார்கள். பலரும் இந்தப் படத்தினை திரையிட ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளைத் தாண்டி ஒற்றை திரையரங்குகளுக்கான படமாகவும் இது இருக்கும் என கருத்து தெரிவித்துள்ளனர். டிசம்பர் 25-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் காட்சிகளை முன்பே திரையிட்டு காட்டியது, இந்தப் படத்தின் மீதான நம்பிக்கையை காட்டுகிறது என வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Share this story