இந்த வார ஓடிடி ஸ்பெஷல் என்னென்ன? முழு விவரங்கள்..!

OTT

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் வெளியான புதிய திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகி வரும் நிலையில் இந்த வாரம் நயன்தாராவின் திருமணம் வீடியோ வெளியாகி உள்ளது.நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் தேதி நடந்த நிலையில் இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிய நிலையில் தற்போது இந்த தம்பதிகளுக்கு இரட்டை குழந்தைகள் உள்ளன.இந்த நிலையில் தான் தற்போது இந்த திருமண வீடியோ நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி உள்ளது என்பதும் இந்த வீடியோ நல்ல வரவேற்பு பெற்று வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.nayan

மேலும் பிரபுதேவா நடித்த ’பேட்ட ராப்’ என்ற தமிழ் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி உள்ள நிலையில் மற்ற மொழி திரைப்படங்கள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்.petta rap

ஆஹா ஓடிடியில் 'ரேவு’ என்ற தெலுங்கு படம், ஈடிவி வின் ஓடிடியில் ’உஷா பரினயம்’ என்ற தெலுங்கு படம், அமேசான் ப்ரைமில் ‘மா நன்ன சூப்பர் ஹீரோ’ என்ற தெலுங்கு படம் ஆகியவை இந்த வார ஓடிடி ரிலீஸ் ஆகும், மேலும் ப்ரைமில் ‘அடித்தட்டு’ என்ற மலையாள திரைப்படமும் ரிலீஸ் ஆகியுள்ளது.KISHkinda gandam

Share this story