“நீங்கள் கண்டது பாதியே... எஞ்சியதை பார்த்தால்தான் கதை புரியும்” - பிரசாந்த் நீல்

“நீங்கள் கண்டது பாதியே... எஞ்சியதை பார்த்தால்தான் கதை புரியும்” - பிரசாந்த் நீல்

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் நேற்று ரிலீஸ் ஆன படம் சலார். ஹோம்பலே நிறுவனம் தயாரித்துள்ள  இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். நடிகர் பிருத்விராஜ் வில்லனாக மிரட்டியுள்ளார். தமிழ், மலையாளம் ,கன்னடம், இந்தி, தெலுங்கு  உள்ளிட்ட மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் படத்திற்கு நேமறையான விமர்சனத்தை கொடுத்து வருகின்றனர். படம் முதல் நாள் ரூ.165 கோடி முதல் ரூ. 175 கோடிவரை வசூல் செய்தது. தற்போது இரண்டாவது நாளில் ரூ. 260 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்து வருகிறது. 

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல், சலார் இரண்டாம் பாகம் வெளியாகும்போது உங்களுக்கு நிறைய விஷயங்கள் புரிய வரும். கதைக்கு என்ன தேவையோ அதை செய்திருக்கிறேன், விமர்சனங்களுக்காக அடுத்த பாகத்தில் எந்த மாற்றத்தையும் செய்யப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
 

Share this story