குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது..?
1747917202771

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷின் 51வது படமாக 'குபேரா' உருவாகியுள்ளது. இதில் நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சார்ப், பாக்யராஜ், சுனைனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாந்த் இசையமைத்துள்ளார்.
இப்படம் ஜூன் 20ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இதன் புரமோஷன் நிகழ்ச்சியாக முதற்கட்டமாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் வருகின்ற ஜூன் 1ம் தேதியன்று பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.