'குக் வித் கோமாளி' சீசன் 6 எப்போது தொடங்கும் ? லேட்டஸ்ட் தகவல்...!

'குக் வித் கோமாளி' சீசன் 6 குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பெரும்பாலான பார்வையாளர்களையும் கவர்ந்துள்ளது. முதல் நான்கு சீசன்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றன என்பது தெரிந்ததே. ஆனால், ஐந்தாவது சீசனில் 'மீடியா மிஷன்' விலகியதுடன், அதன் பிறகு நடுவர்களில் ஒருவரான வெங்கடேஷ் பட் அவர்களும் விலகினார். இதனைத் தொடர்ந்து, சில சர்ச்சைகளும் நிகழ்ந்தன. குறிப்பாக, பிரியங்கா மற்றும் மணிமேகலை இடையேயான மோதல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், மணிமேகலை 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் இருந்து விலகினார்.
இந்த நிலையில், 'குக் வித் கோமாளி' ஆறாவது சீசன் எப்போது தொடங்கும்? என்று பார்வையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். வரும் ஏப்ரல் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கும், மே மாதம் முதல் ஒளிபரப்பு நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.அத்துடன், ஐந்தாவது சீசனில் ஆங்கராக இருந்த மணிமேகலை விலகியதை அடுத்து, அவருக்கு பதிலாக ரக்சனுடன் சேர்ந்து ஜாக்லின் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே, ரக்சன் மற்றும் ஜாக்லின் இருவரும் 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கிய நிலையில், அதே அளவிலான மகிழ்ச்சியை 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியிலும் காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.