‘கல்கி 2898 ஏடி’ 2-ம் பாகம் வெளியீடு எப்போது?

kalki 2898 AD

‘கல்கி 2898 ஏடி’ படத்தின் 2-ம் பாகம் வெளியீடு குறித்த தகவல் இணையத்தில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது. நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், பிரபாஸ், கமல்ஹாசன்,  தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கல்கி 2898 ஏடி’.

வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட இந்தப் படம் உலகளவில் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை புரிந்தது. கடந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகி, அதிலும் சாதனை புரிந்து வருகிறது.இதன் 2-ம் பாகத்தில் கமல்ஹாசன் கதாபாத்திரத்தினை வைத்து கதை நகரும் என்று இயக்குநர் பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். இதனிடையே, 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு உடனடியாக தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

‘கல்கி 2898 ஏடி’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்பனா தத், ‘கல்கி 2898 ஏடி’ டத்தின் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு 2025-ம் ஆண்டு தொடக்கத்தில் தொடங்கப்படும். ஆனால் 2028-ம் ஆண்டு தான் வெளியாகும் என தெரிவித்துள்ளார். இந்தப் பேட்டி இணையவாசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Share this story