தமிழ் சினிமாவில் எப்போது ரூ.1000 கோடி வசூல்? இயக்குனர் மணிரத்னம் என்ன சொன்னார் தெரியுமா..?

manirathanam

தமிழ் சினிமாவில் ரூ.1000 கோடி வசூல் குறித்து  இயக்குனர் மணிரத்னம் பேசியுள்ளார். 


மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தக் லைஃப்’. மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் ஜூன் 5-ம் தேதி வெளியாகவுள்ளது. இன்று இப்படத்தின் இசை வெளியிட்டு விழா நடைஒயிற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  

 


 

 படத்தின் இயக்குநர் மணிரத்னம் சில நேர்காணல்களில் பங்குபெற்று 'தக் லைப்’ திரைப்படத்தையும் தாண்டி பல விஷயங்களைப் பேசி வருகிறார்.
நேர்காணலில் கலந்துகொண்ட மணிரத்னத்திடம் ஏன் தமிழ் சினிமாவிலிருந்து இன்னும் ரூ. 1000 கோடியை வசூலிக்கும் திரைப்படம் உருவாகவில்லை எனக் கேட்கப்பட்டது. அதற்கு மணிரத்னம், "நாம் எதற்காக சினிமாவுக்கு வந்தோம்? நல்ல படங்களை எடுக்க வந்தோமோ இல்லை இருப்பதிலேயே அதிக வசூலைக் குவிக்கும் படத்தை எடுக்க வேண்டும் என்பதற்காகவா? முன்பெல்லாம் ஒரு படம் நன்றாக இருக்கிறது; ஒருகடத்திற்கு மேல் நன்றாக இல்லையென்றே பேசிக்கொண்டிருந்தனர். ஆனால், இப்போது ரூ. 100 கோடி, ரூ. 500 கோடி என வசூலைப் பற்றி யோசிக்கின்றனர். எனக்குத் தெரிந்த பல இயக்குநர்கள் நல்ல படங்களைக் கொடுக்க வேண்டுமென நினைக்கின்றனர். அப்படங்கள் அதிகமாக வசூலித்தால் சந்தோஷம். சிலர் வசூலைக் குவிப்பது ஒன்றே நோக்கமாக வைத்திருந்தால் அதுவும் சரிதான். ஆனால், நான் ரூ. 1000 கோடி வசூலிக்க வேண்டும் என்பதற்காக ஒரு படத்தை இயக்க மாட்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Share this story