விஜய் சேதுபதியின் 'யாதும் ஊரே யாவரும் கேளிர் ரிலீஸ் எப்போது ? .. படக்குழு அறிவிப்பு

Vijay Sethupathis Yathum Ure Yavarum Kelir

விஜய் சேதுபதி நடிக்கும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தின் ரிலீஸ் எப்போது என்று படக்குழு அறிவித்துள்ளது.

விஜய் சேதுபதி வித்தியாசமாக நடித்து வெளிவர காத்திருக்கும் திரைப்படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. மறைந்த இயக்குனர் ஜனநாதனிடம் உதவி இயக்குனராக இருந்த வெங்கடகிருஷ்ணன் ரோஹந்த் இந்த படத்தை இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி இந்த படத்தில் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ளது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

yadhum oore yavarum kelir

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இவர்களுடன் இயக்குனர் மோகன் ராஜா, விவேக், விஸ்வகுமார், கனிகா, ரித்விகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி வில்லனாக நடித்துள்ள இப்படத்தை சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தில் மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

yadhum oore yavarum kelir

ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நீண்ட நாட்களாக முன் தயாரான இப்படத்தை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இதையடுத்து திரையரங்கு திறப்பால் இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் எப்போது என்ற படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

Share this story