பாகுபலி படத்தில் முன்பு நடிக்க இருந்தது எந்த தமிழ் ஹீரோ தெரியுமா ?

bahubali web series

நடிகர் சூர்யா சமீபத்தில் நடித்த ரெட்ரோ மற்றும் கங்குவா படங்களை தொடர்ந்து தற்போது கருப்பு படத்தில் நடித்து வருகிறார் .இந்த படத்தின் டீசர் வெளியாகி மக்களை கவர்ந்துள்ளது .இவர் நடிக்க தவற விட்ட படங்கள் த்துப்பாக்கி ,ஆசை ,பையா போன்ற வெற்றி படங்கள் .பின்னர் இந்த படங்களில் வேறு ஹீரோக்கள் நடித்து வெற்றி பெற்றது 
 சூர்யா  தவறவிட்ட படங்களுள், பாகுபலி திரைப்படமும் ஒன்று என்று கூறப்படுகிறது. இப்படத்தின் முதல் பாகம், சுமார் ரூ.650 கோடி வரை ஹிட் அடித்தது. பாகுபலி இரண்டாம் பாகம், சுமார் ரூ.1800 கோடியை தாண்டி வசூலித்து வெற்றி பெற்றது. 
பாகுபலி படத்தை எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கினார். இந்த படத்தில் ராணாவின் கதாப்பாத்திரமான பல்வாள் தேவன் கேரக்டரில் நடிக்க முதலில் சூர்யாவைத்தான் தேர்ந்தெடுத்தனராம். ஆனால், இந்த கதாப்பாத்திரம் தனக்கு திருப்தியாக இல்லை என்று கூறி சூர்யா வேண்டாம் என்று சொல்லி விட்டாராம். இப்படிப்பட்ட ஒரு மொக்கையான காரணத்துக்காக அவ்வளவு பெரிய படத்தை இழந்து விட்டாரே என்று இவரது ரசிகர்கள் இப்போதும் புலம்புவதுண்டு.

Share this story