நடிகர் தனுஷ் எனக்கு யார்..? மனம் திறந்த நடிகை மிருணாள் தாக்கூர்..!

1

நடிகர் தனுஷ் இயக்குனர் கஸ்தூரிராஜாவின் வாரிசு, இயக்குனர் செல்வராகவனின் தம்பி என்று அடையாளத்தோடு சினிமாவுக்கு வந்தாலும், அதற்கு பிறகு கடுமையாக போராடி முன்னணி நாயகனாக உயர்ந்தவர். தமிழ் மட்டுமல்லாது பாலிவுட்டிலும், ஹாலிவுட்டிலும் நடித்து வெற்றி கொடி நாட்டியிருக்கிறார் தனுஷ். நடிகர், பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட கலைஞனாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு இரு மகன்கள் இருக்கும் நிலையில், திடீரென கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்தார் தனுஷ். இது ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தொடர்ந்து சினிமாவில் ஆர்வம் காட்டி வருகிறார். மேலும், இயக்கத்திலும் மிக ஆர்வமாக இருக்கும் தனுஷ் இயக்கம், நடிப்பு என இரு குதிரைகளில் பயணித்து வருகிறார்.

ஒரு காதல் விவகாரம் தனுஷை குறி வைத்து பரவி வருகிறது. சீதாராமம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற மிருணாள் தாக்கூருடன் காதலில் இருப்பதாக கூறப்பட்டது. அதற்கேற்றார் போல் சன் ஆப் சர்தார் 2 உள்ளிட்ட பல்வேறு பாலிவுட் நிகழ்ச்சிகளில் தனுஷும் மிருணாள் தாக்கூரும் ஒன்றாக கலந்து கொண்டனர். இதனையடுத்து இருவரும் காதல் உறவில் இருப்பது உண்மைதான் என நெட்டிசன்கள் கூறி வந்தனர்.

தொடர்ந்து இந்த விவகாரம் பெரிதான நிலையில் தற்போது இது குறித்த தகவலுக்கு மிருணாள் தாக்கூரே விளக்கம் அளித்திருக்கிறார். ” தனுஷ் எனக்கு நல்ல நண்பர் மட்டும் தான். சமீபத்தில் எங்கள் இருவருக்கும் இடையே காதல் இருப்பதாக வதந்திகள் பரவியது எனக்கு தெரியும். அதை பார்க்கும்போது எனக்கு சிரிப்பு மட்டும் தான் வந்தது. அஜய் தேவ்கானும் தனுஷும் நல்ல நண்பர்கள். அஜய் தேவ்கான் அழைத்ததால்தான் அந்த நிகழ்வில் தனுஷ் கலந்து கொண்டார். ஆனால் என்னை வைத்து ஏன் இப்படி பேசுகிறார்கள் என தெரியவில்லை” எனக் கூறியிருக்கிறார்.

Share this story