‘டிராகன்’ படத்தில் கேமியோ ரோலில் யார்.. யார்.. ? இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து சொன்ன தகவல்..

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் திரைப்படம் தான் டிராகன். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க லியோன் ஜேம்ஸ் இதற்கு இசை அமைத்துள்ளார். நிகேத் பொம்மி இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். காதல் கலந்த கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து அனுபமா பரமேஸ்வரன், கயடு லோகர், மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், ஜார்ஜ் மரியான் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.
இந்த படமானது வருகின்ற பிப்ரவரி 21 அன்று திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதேசமயம் சமீபத்தில் இதன் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. இந்நிலையில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் டிராகன் படத்தில் நடித்துள்ள கேமியோ ரோல்கள் குறித்து பேசி உள்ளார்.
null"There are a lot of cameos in #Dragon. One is Sneha mam & another one BIG cameo which we are keeping it as surprise😯🔥. And it's not #SilambarasanTR" - Dir Aswath
— AmuthaBharathi (@CinemaWithAB) February 12, 2025
Who's gonna be that Big Cameo👀❓pic.twitter.com/ux5lTHs5up
அதாவது ஏற்கனவே ட்ரைலரிலேயே நடிகை சினேகா இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்திருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. அடுத்தது அஸ்வத் மாரிமுத்துவிடம், இந்த படத்தில் சிம்பு கேமியோ ரோலில் நடித்திருக்கிறாரா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அஸ்வத் மாரிமுத்து, “டிராகன் படத்தில் நிறைய கேமியோக்கள் இருக்கிறது. சினேகா மேடம் இருக்கிறார். வேறொரு பெரிய கேமியா ஒன்று இருக்கிறது. ஆனால் அது சிம்பு கிடையாது” என்று தெரிவித்துள்ளார். அஸ்வத் மாரிமுத்துவின் இந்த பதில் டிராகன் படத்தில் யார் அந்த பெரிய கேமியோ? என்ற எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.