மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தின் கதாநாயகன் யார் தெரியுமா...?

manirathanam

மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தின் கதாநாயகன் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 

தற்போது கமல்ஹாசன், சிம்பு, திரிஷா நடிப்பில் ‛தக்லைப்' படத்தை இயக்கியிருக்கிறார் மணிரத்னம். இப்படத்தின் டிரைலர் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பு பெற்று வருகிறது. இப்படம் ஜூன் 5ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில் அடுத்தபடியாக தெலுங்கு நடிகர் நவீன் பாலி ஷெட்டியை வைத்து ஒரு படத்தை மணிரத்னம் இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

manirathanm

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்த படம் மென்மையான காதல் கதையில் உருவாகிறது. இந்த படம் குறித்த தகவல்கள் தமிழை விட தெலுங்கு ஊடகங்களில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. தக்லைப் படம் திரைக்கு வந்த பிறகு இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.
 

Share this story