தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் வில்லன் யார் தெரியுமா?
1726211378118
தனுஷ் கடைசியாக ராயன் திரைப்படத்தை இயக்கி நடித்து இருந்தார். இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிஷன் மற்றும் துஷரா விஜயன் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படம் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து தனுஷ் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இது இவர் இயக்கும் 3 திரைப்படமாகும். படத்தின் பாடலான கோல்டன் ஸ்பேரோ பாடல் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்பொழுது தனுஷ் இயக்கவிருக்கும் 4- வது படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் தனுஷ், அருண் விஜய் மற்றும் அசோக் செல்வன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். தனுஷ் கதாநாயகனாகவும், அருண் விஜய் வில்லனாக நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் மிகப்பெரிய பொருட் செலவில் தயாரிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் பட்ஜெட் 120 கோடி ரூபாயில் எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதுக்குறித்த மற்ற தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.