நடிகை த்ரிஷாவின் 20 ஆண்டு கால நெருங்கிய தோழி யார் தெரியுமா..?

sharmi

நடிகை த்ரிஷாவின் தனது 20 ஆண்டு கால நெருங்கிய தோழியான பிரபல நடிகையை சந்தித்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். 

நடிகை த்ரிஷா கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் நாயகியாக நடித்து வரும் நிலையில், அவருக்கு ஏராளமான திரையுலக நண்பர்கள் மற்றும் தோழிகள் உள்ளனர். ஆனால், ஒரு சிலரிடம் மட்டுமே அவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நெருங்கிய நட்பை கொண்டு வந்துள்ளார். அப்படி ஒரு நெருங்கிய தோழி தான் பிரபல நடிகை சார்மி என்பது அவரது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் தெரிய வந்துள்ளது.sharmi

சிம்பு நாயகனாக அறிமுகமான "காதல் அழிவதில்லை" என்ற திரைப்படத்தில் தான் சார்மியும் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். "காதல் கிசுகிசு" என்ற தமிழ் படத்தில் நடித்த பிறகு ஏராளமான தெலுங்கு படங்களில் தான் நடித்தார். அதன் பின் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக மாறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, பல தெலுங்கு படங்களையும் அவர் தயாரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சார்மி மற்றும் த்ரிஷா ஆகிய இருவரும் 20 ஆண்டுகளுக்கு மேலாக நெருங்கிய தோழிகளாக இருந்து வருகின்றனர் என்பது அவர்களது இன்ஸ்டாகிராம் பதிவில் இருந்து தெரியவந்துள்ளது.இருவரும் சமீபத்தில் சந்தித்தபோது, அந்த சந்திப்பு நெகிழ்ச்சியாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளனர். "20 ஆண்டுகள் கழித்தும் எப்போதும் எங்கள் நட்பு வலிமையாக தொடர்ந்து கொண்டிருக்கிறது" என்று சார்மியும் த்ரிஷா தங்களது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன

Share this story