வேலு நாச்சியார் படத்தில் நான் நடிக்கிறேன்னு யார் சொன்னது..? கதறிய நயன்தாரா!

‘ஒரு வேலு நாச்சியாரை வைத்து எத்தனை படம்தான் எடுப்பீங்க’ என்று இரண்டு நாளைக்கு முன்னாடி நாம் ஒரு செய்தி போட்டிருந்தோம் ஞாபகமிருக்கா..! அப்போதே எப்படியும் பஞ்சாயத்து வரும் என்று சொல்லியிருந்தோம். கதை விசயமாக பிரச்சினை வரும் என்று நினைத்தால், பஞ்சாயத்து நயன்தாரா மூலம் வந்திருக்கு.
ஒரு இயக்குனர் முன்னணி நடிகையுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கு என்று சொல்லியிருந்தார். ஆனால், இயக்குனர் சுசி.கணேசன், நயன்தாரா நடிக்கவிருக்கிறார் என்று சொல்லியிருந்தார். அதைத்தான் மறுத்திருக்கிறார் நயன்தாரா! ஹிஸ்டாரிக்கல் படத்தில் நான் நடிக்க விருப்பதாக ஊடகங்களில் செய்தி வந்திருப்பதைப் பார்த்து நான் அதிர்ச்சியாகிட்டேன். அப்படியொரு படம் எடுக்கிற விசயமே எனக்குத் தெரியாது. அது வெறும் வதந்திதான்… யாரும் நம்ப வேண்டாம் என்று தனது செய்தி தொடர்பாளர் மூலம் துண்டு அறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறார்.
கூடவே, ஒரு செய்தியைப் போடுறதுக்கு முன்னாடி, அது உண்மையா பொய்யா என்று என்னிடமோ அல்லது என்னோட செய்தி தொடர்பாளர்கிட்டயோ கேட்டுட்டுப் போட்டிருக்கலாம் என்றும் ஆதங்கப்பட்டிருக்கிறார். என்ன மேடம் பண்றது… இது பிரேக்கிங் நியூஸ் காலம்!

