லியோ படத்தில் சாகப்போவது த்ரிஷாவா? ப்ரியாவா? லோகேஷின் பதில்.

photo

ஒவ்வொரு இயக்குநர்களும் தனக்கான ஸ்டைலில் படங்களை இயக்கி வருகின்றனர். அந்த வகையில் லோகேஷின் படங்கள் என்றாலே கதாநாயகி இறந்துவிடுவார் என்று பரவலாக பேசப்படுவதுண்டு. இந்த நிலையில் சமீபத்தில் ‘லியோ படத்தில் த்ரிஷா, ப்ரியா என இரண்டு கதாநாயகிகள் உள்ளனர், அதில் யார் இறந்து விடுவார்கள்’ என்ற கேள்விக்கு லோகேஷ் பதிலளித்துள்ளார்.

photo

வரும் 19ஆம் தேதி வெளியாகவுள்ள ‘லியோ’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது அதேசமயம் அந்த டிரைலரில் நடிகர் விஜய் கெட்ட வார்த்தை பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. தொடர்ந்து படம் குறித்த அப்டேட்டுகள் வெளியான வண்ணம் உள்ளது. இந்த நிலையில் லியோ படத்தில் நடித்துள்ள இரண்டு கதாநாயகிகளான த்ரிஷா மற்றும் ப்ரியா ஆனந்த இருவரில் யார் இறந்து விடுவார்கள் என்ற கேள்விக்கு படத்தின் இயக்குநரான லோகேஷ் “இதே கேள்வியைதான் என்னிடம் த்ரிஷா மேடமும் கேட்டார். நானும், ப்ரியா ஆனந்தும் இருக்கிறோம் இரண்டு பேரில் யாரை கொலை செய்யப்போகிறீர்கள் என்று கேட்டாங்க; உங்க ஆசைக்கு யாரையாவது கொன்றுவிடுகிறேன் என்றேன்.” என நகைச்சுவையாக பதிலளித்துள்ளார். இந்த படத்தில் ப்ரியா ஆனந்த், கௌதம் மேனனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

photo

Share this story