SSMB29 படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிப்பது யார் தெரியுமா...?

rajamouli

ராஜமௌலி, மகேஷ் பாபு படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிப்பது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ராஜமௌலி இந்திய அளவில் தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். அந்த அளவிற்கு இவரது இயக்கத்தில் வெளியான பாகுபலி 1, பாகுபலி 2, ஆர் ஆர் ஆர் ஆகிய படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அடுத்தது இவர், மகேஷ் பாபு நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. தற்காலிகமாக SSMB29 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படமானது பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் 2025 ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் எனவும் ஏற்கனவே தகவல் வெளியானது. அதுமட்டுமில்லாமல் இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகம் 2027 ஆம் ஆண்டிலும் இரண்டாம் பாகம் 2029 ஆம் ஆண்டிலும் திரைக்கு வரும் என சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என ஏற்கனவே தகவல் கசிந்தது.

rajamoauli
 இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், நடிகை பிரியங்கா சோப்ரா தான் இந்த படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிக்கப் போகிறாராம். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ராஜமௌலியின் மற்ற படங்களில் நெகட்டிவ் ரோல் வலுவாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அதுபோலவே இந்த படத்தில் பிரியங்கா சோப்ராவின் கதாபாத்திரமும் ஸ்ட்ராங்கானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என நம்பப்படுகிறது.

Share this story