விஜய் தான் காரணம்….. வாரிசு படத்துல எனக்கு முக்கியத்துவம் இல்ல – மனம் திறந்த ராஷ்மிகா.

photo

குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக இருக்கும் ‘வாரிசு’ திரைப்படத்தில் தான் ஏன் நடிக்க ஒப்புக்கொண்டேன் என படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தான விளக்கம் கொடுத்துள்ளார்.

photo

இளைய தளபதி விஜய் நடிப்பில் ‘வாரிசு’ திரைப்படம் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பிரபு, பிரகாஷ்ராஜ், ஷாம், சரத்குமார் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படம் 7நாளில் ரூ.210 கோடி வசூலித்ததாகத் தயாரிப்பு தரப்பு  தகவலை தெரிவித்திருக்கின்றன.

photo

இந்த நிலையில் வாரிசு தான் ஏன் வாரிசு படத்தில் நடித்தேன் என்பது குறித்து ராஷ்மிகா மந்தானா விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது “ வாரிசு படத்தில் எனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்று எனக்கு தெரியும், படத்தில் எனக்காக இரண்டு பாடல்கள் தவிர வேறு இல்லை, இருந்தாலும் நான் ஏன் படத்தில் நடிக்க சம்மதித்தேன் தெரியுமா… விஜய்க்காக மட்டும் தான். விஜய்ய எனக்கு ரொம்ம பிடிக்கும், ஒரு நடிகையாக எல்லா வகையான பாத்திரங்களிலும் கமர்சியல் படங்களில் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.அந்த வகையில் இது சரிதான். ஒரே மாதிரியான வேடங்களில் நடிக்க விரும்பவில்லை” என மனம் திறந்து பேசியுள்ளார் ராஷ்மிகா மந்தானா.

Share this story