பாக்ஸ் ஆபீஸ் இயக்குநரின் படம் ஓடிடியில் வெளியாக காரணம் என்ன?

photo

தனது தனித்துவமான கதையின் மூலமாக எக்கசக்க ரசிகர்களை பெற்ற இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்த படைப்பான வாழை தியேட்டரில் ரிலிஸ் ஆகாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாவது பலருக்கும் கேள்வியை எழுப்பியுள்ளது.

photo

பரியேறும் பெருமாள், கர்ணம், மாமன்னன் உள்ளிட்ட படங்கள் மூலமாக ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை குரலாய் ஒலித்த இயக்குநர் மாரி செல்வராஜின் படைப்புகள் அனைத்தும் தியேட்டரில் வெளியாகி நல்ல விமர்சனத்தையும், பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலையும்  கொடுத்த நிலையில் தற்போது அவரது அடுத்த படைப்பான வாழை ஓடிடியில் வெளியாக காரணம் அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமே டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் என்பதால் தான்.  சந்தோஷ் நாராயணம் இசையமைத்துள்ள வாழை படத்தில் கலையரசன், திவ்யா துரைசாமி ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share this story