கொள்கை பாடலுக்கு ஏன் தெருக்குரல் அறிவு? - விஜய் சொன்ன பதில்

arivu

நடிகர் விஜய்யின் த.வெ.க-வின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதில் அக்கட்சியின் தலைவர் விஜய், கட்சியின் கொள்கைகள், கொள்கை தலைவர்கள், அரசியல் எதிரிகள், கொள்கை எதிரிகள் என விவரித்தார். 


மாநாட்டில் கட்சியின் கொள்கைகளை விளக்கும் ஒரு காணொளி திரையிடப்பட்டது. அதோடு கொள்கை பாடல் வெளியிடப்பட்டது. ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வரிகளோடு தொடங்கும் இப்பாடலை ராப் பாடகர் தெருக்குரல் அறிவு பாடியுள்ளார். இதில் விஜய்யும் கட்சியின் கொள்கை தலைவர்கள் குறித்து கூறியிருந்தார்.    


இந்த நிலையில் இப்பாடலை பாடிய தெருக்குரல் அறிவு, விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் விஜய் தன்னை ஏன் தேர்வு செய்தார் என்பதையும் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், “நான் விஜய்யிடம் ஏன் என்னை தேர்வு செய்தீர்கள் என்று கேட்டேன். அதற்கு உன்னால் மட்டுமே முடியும் என்றார். என்னை நம்பி கட்சியின் கொள்கை பாடலை கொடுத்ததற்கு நன்றி விஜய் சார். உங்கள் குரலை பதிவு செய்வது என் வாழ்வின் மிகப்பெரிய மறக்க முடியாத தருணம். உங்கள் அரசியல் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Share this story