சென்னையில் "ஒயில்ட் பயர்"... 'புஷ்பா 2 தி ரூல்' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி
சென்னை தாம்பரத்தில் புஷ்பா 2 படத்தின் "ஒயில்ட் பயர்" என்ற புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருந்துவருபவர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த படம் 'பு'புஷ்பா தி ரைஸ்'. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக 'புஷ்பா 2 தி ரூல்' படம் உருவாகியுள்ளது. 'புஷ்பா 2 தி ரூல்' படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 'புஷ்பா' படத்தில் 'ஊ சொல்றியா' என்ற பாடலுக்கு சமந்தா நடனமாடி இருந்தநிலையில், புஷ்பா -2 படத்தில் நடிகை ஸ்ரீலீலா 'கிஸ்சிக்' என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்தின் சில பாடல்கள் மற்றும் டிரெயல்ர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த டிரெய்லர் சுமார் 12 கோடிக்கும் அதிக பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. புஷ்பா 2 திரைப்படம் வரும் டிசம்பர் 5-ம் தேதி வெளியாகவுள்ளது.
Makkale, Singara Chennai la oru special evening ku ready ah? 🤩
— AGS Entertainment (@Ags_production) November 20, 2024
PUSHPA'S WILDFIRE EVENT on November 24th from 5 PM Onwards ❤🔥
Venue : Leo Muthu Indoor Stadium, Sai Ram Engineering College
ICYM the #Pushpa2TheRuleTrailer
▶️ https://t.co/azziSwVh4F#Pushpa2TheRule… pic.twitter.com/KWBb7fdZGW
இப்படத்தை உலகளவில் 11,000 திரைகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா பாட்னாவில் மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. இதில் மக்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற உள்ளது. அதாவது வருகிற 24-ந் தேதி தாம்பரம் சாய் ராம் என்ஜினீயரிங் கல்லூரியில் உள்ள லியோ முத்து லிங்கம் அரங்கத்தில் "ஒயில்ட் பயர்" நிகழ்ச்சி மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது.