ஷாருக்கானால் 'விஜய்' மற்றும் 'அஜித்'திற்கு வந்த நெருக்கடி.

photo

கோலிவுட்டின் இரு பெரும் தூண்களான அஜித் மற்றும் விஜய்யின் நடிப்பில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியான ‘துணிவு’ மர்றும் ‘வாரிசு’ ஆகியம் படங்கள் ரசிகர்களின் பேராதரவோடு வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இந்த படங்களின் பாக்ஸ் ஆஃபிஸ் போட்டியாக ஷாருக்கான் நடித்த ‘பதான்’ திரைப்படம் வெளியாகியுள்ளது.

photo

இந்த படத்திற்கு போதுமான தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் இருந்தாலும், இதுவரை வந்திருக்கும் விமர்சனங்கள் பாசிட்டிவ்வாக இருப்பதாலும் கமல்ஹாசன் உள்ளிட்டோர் கூட ஷாரூக்கானின் பதான் படத்துக்கு பெரும் வரவேற்பை கொடுத்துள்ளனர்இதுவரை துணிவு, வாரிசு என இரண்டு படங்கள் மட்டுமே தமிழகத்தில் போட்டி போட்ட நிலையில் வட இந்தியாவில் வசூலை வாரிக் குவிக்கும் பதான் தமிழகத்திலும் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு  வரவேற்பு கிடைத்துள்ளது.

photo

அதரடி ஆக்ஷனில் தயாராகியுள்ள பதான் திரைப்படத்தின் வருகையால் கோலிவுட் ஸ்டார்களின் கலெக்ஷன் குறைய அதிகம் வாய்ப்புள்ளது. இருந்தாலும் அந்த படங்களின் ஒட்டுமொத்த கலெக்ஷனை முறியடிக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறதுதொடர்ந்து ஷாருக்கானின் ‘ஜவான் ‘ திரைப்படமும் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this story