2023ல் தமிழ் சினிமா மொத்த வசூல் 2024ல் 'டபுள்' ஆகுமா ?

2023ல் தமிழ் சினிமா மொத்த வசூல் 2024ல் 'டபுள்' ஆகுமா ?

2023-ம் ஆண்டு சினிமாவை பொறுத்தவரை சில பல சோதனைகளுடனும், சாதனைகளுடன் கடந்து போனது. கொரோனாவுக்கு பிறகு கடந்த 4 வருடங்களில் வெளியான சில முக்கிய படங்கள் வழக்கமான வசூலைக் காட்டிலும் அதிக வசூலைக் குவித்து சாதனை படைத்து வருகின்றன. 2022 ம் ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் 500 கோடி ரூபாய் வசூலித்தது. இதைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் 400 கோடி வசூலை ஈட்டியது. 

2023ல் தமிழ் சினிமா மொத்த வசூல் 2024ல் 'டபுள்' ஆகுமா ?

இதுவ தவிர பீஸ்ட், வலிமை, திருச்சிற்றம்பலம், டான், சர்தார், லவ் டுடே ஆகிய நேரடித் தமிழ் படங்களும், ஆர்.ஆர்.ஆர். கேஜிஎப் 2 ஆகிய டப்பிங் படங்களும் பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்து மொத்தமாக அந்த ஆண்டில் ஆயிரத்து 500 கோடிக்கும் அதிகமான வசூலைக் கொடுத்தன.  2022ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2023ல் 700 கோடி ரூபாய் அதிக வசூல் கிடைத்துள்ளது. அதேபோல, 2024-ம் ஆண்டில் பல பிரம்மாண்ட படங்கள், முன்னணி நடிகர்களின் படங்கள் பல வருவதால் இந்த ஆண்டு 3 ஆயிரம் கோடிக்கும் மேல் அல்லது அதைவிட டபுள் மடங்கு ஆகும் என தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். 

Share this story