மீண்டும் கார் ரேஸில் வெற்றி.. நடிகர் அஜித்தின் அணி அசத்தல்..

ak

இத்தாலியில் நடந்த கார் ரேஸில் அஜித் அணி மூன்றாவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.


ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் ''குட் பேட் அக்லி''. த்ரிஷா, அர்ஜூன் தாஸ், பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. படம் வரும் ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் தீவிரமடைந்துள்ளன. அண்மையில் வெளியான இந்தப் படத்தின் டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அஜித்தின் பல்வேறு கெட்டப்புகள் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

 


படத்தில் தனது பங்களிப்பை முடித்துக்கொடுத்த அஜித், தற்போது கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக 'அஜித் ரேஸிங்' அணியை உருவாக்கியுள்ள அஜித் சமீபத்தில் துபாயில் நடந்த ரேஸில் ''அஜித்குமார் ரேஸிங்'' அணி 3வது இடம் பிடித்து சாதித்தது. அதன்பிறகு, போர்ச்சுக்கல்லில் நடந்த ரேஸிலும் கலந்துகொண்டது அஜித் அணி.
   
இதனிடையே, தற்போது இத்தாலியில் நடைபெறும் போட்டியில் கலந்து கொண்டுள்ளது. இத்தாலியின் Mugello சர்கியூட்டில் நடந்த 12H ரேஸில் அவர் அணி பங்கேற்றது. இதில் அஜித் அணி GT992 பிரிவில் மூன்றாம் இடம் பிடித்து சாதித்து உள்ளது. வெற்றி பெற்று பரிசு வாங்க மேடையேறிய போது, அஜித் இந்திய கொடி உடன் சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கார் ரேஸில் தொடர் வெற்றியை குவித்து வரும் நடிகர் அஜித்துக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

Share this story

News Hub