4 தலைமுறை இயக்குனர்களுடன்.... டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து நெகிழ்ச்சி

dragon

டிராகன் படத்தில் வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த நான்கு இயக்குனர்களை இயக்கியது மறக்க முடியாதது என இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து நெகிழ்ச்சி குறிப்பிட்டுள்ளார்.

 

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த 'டிராகன்' படம் இந்த ஆண்டின் பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. அப்படம் 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. அஜித் நடித்து வெளிவந்த 'விடாமுயற்சி' படத்தின் வசூலையும் முறியடித்தது. டிராகன் படத்தில் படத்தை இயக்கிய அஷ்வத் மாரிமுத்துவுடன் மேலும் நான்கு இயக்குனர்கள் பணியாற்றி உள்ளனர். அதன்படி, பிரதீப் ரங்கநாதனும் ஒரு இயக்குனர்தான். மேலும், இயக்குனர்கள் கேஎஸ் ரவிக்குமார், கவுதம் மேனன், மிஷ்கின் ஆகியோர் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.


அவர்களுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்த இயக்குனர் அஷ்வத், “நினைவில் கொள்ள வேண்டிய தருணம். வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த நான்கு தனித்துவதமான இயக்குனர்களை இயக்கியது மறக்க முடியாதது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

Share this story