10 நாளில் 25 கோடி வசூல் -எந்த படம் தெரியுமா ?
1771893008000
மதன் இயக்கத்தில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்ற படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக அறிமுகமான படம், ‘வித் லவ்’. இதில் அவரது ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடித்தார். மகேஷ் ராஜ் பசிலியான், சவுந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து தயாரித்தனர். ஷான் ரோல்டன் இசை அமைத்தார். காதல் கதையில் இளைஞர், இளஞிகளை கவரும் வகையில் உருவான இப்படம், 2கே கிட்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த 6ம் தேதி வெளியான இப்படம், 10 நாட்களில் உலகளவில் ரூ.25 கோடி வசூலை கடந்துள்ளது.
இதன்மூலம் இந்த ஆண்டில் வெளியான படங்களில் 2வது வெற்றிப் படம் என்ற பெருமையை ‘வித் லவ்’ படம் பெற்றுள்ளது. முன்னதாக ஜீவா நடிப்பில் வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ என்ற படம் நல்ல வரவேற்பையும், ரூ.30 கோடி வசூலையும் கடந்து வெற்றிபெற்று இருந்தது