ரஜினி மீது குற்றம்சாட்டிய பக்கத்து வீட்டு பெண்மணி

ரஜினி மீது குற்றம்சாட்டிய பக்கத்து வீட்டு பெண்மணி

வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். தசெ ஞானவேல் இயக்கும் இந்தப் படம் வரும் ஏப்ரலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பொங்கலை முன்னிட்டு வேட்டையன் படப்பிடிப்புக்கு பிரேக் விடப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதால் போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் இல்லம் முன்பு ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். புத்தாண்டு, பொங்கல், தீபாவளி, ரஜினியின் பிறந்தநாள் போன்ற ஸ்பெஷல் தினங்களில் அவரது இல்லம் முன் ரசிகர்கள் திரள்வது வழக்கம். அதேபோல், இன்றும் ரஜினியிடம் பொங்கல் வாழ்த்துப் பெற வேண்டும் என நூற்றுக்கணக்கான ரசிகர்கள் போயஸ் கார்டன் ஏரியாவில் குவிந்தனர். இதனையடுத்து ரசிகர்களை சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். 

ரஜினி மீது குற்றம்சாட்டிய பக்கத்து வீட்டு பெண்மணி

இதனிடையே ரஜினியின் பக்கத்து வீட்டு பெண்மணி ஒருவர், ரசிகர்கள் அதிகளவில் திரண்டதால் கடும் ஆத்திரம் அடைந்தார். ஒவ்வொரு முறையும் இப்படி ரசிகர்கள் இங்க வருவது எங்களுக்கு தொல்லையா இருக்கு என குற்றம் சாட்டினார். 

Share this story