கேப்டனின் இறுதி ஊர்வலத்திற்கான பணிக்கள் தீவிரம்.

work for Captain's funeral

கேப்டன் விஜயகாந்தின் மறைவு தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நேற்று காலை 06.10 மணியளவில் அவரது உயிர் சென்னை மியாட் மருத்துவமனையில் பிரிந்தது. தொடர்ந்து அவரை காண ரசிகர்கள், தொண்டர்கள் என பலரும் சாரை சாரையாய் வருகின்றனர். குறிப்பாக திரைப்பிரபலங்கள் பலரும் விடிய விடிய அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

photo

தற்போது சென்னை தீவுதிடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக விஜயகாந்தின் உடல்  வைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மதியம் 1.00 மனியளவில் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக தலைமை கழக அலுவலகம் அடைந்து, இறுதிசடங்கானது  மாலை 4.45 மணியளவில் தேமுதிக தலைமை கழக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

photo

இந்த நிலையில் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்திற்கான பணிகள், இறுதிசடங்கிற்கான பணிகள் அனைத்து மும்முரமாக நடந்து வருகிறது. தேமுதிக தலைமை கழக வளாகத்தில் அவரை புதைக்கும் இடத்திற்கு மார்க் செய்யப்பட்டு பணிகள் துவங்கியுள்ளது. தொடர்ந்த் வரை சுமந்து செல்லும் வாகனத்திற்கு பூக்கள் அலங்கார பணிகளும் நடந்து வருகிறது.

photo

Share this story