உலக நீரழிவு தினம் : விழிப்புணர்வு ஏற்படுத்திய ஏ. ஆர். ரஹ்மான்

ar rahman

இந்தியத் திரைத்துறையில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் ஏ.ஆர் ரஹ்மான் இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என பல்வேறு படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தமிழில் கமலின் கூட்டணியின் தக் லைஃப், ஜெயம் ரவியின் ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களுக்கு இசையமைக்கிறார். 

இதனிடையே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஏ.ஆர் ரஹ்மான் அவ்வப்போது தனது படங்களின் அப்டேட்டுகளை தாண்டி சில விஷயங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இன்று(14.11.2024) நீரிழிவு நோய் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “நண்பர்களே... நான் முக்கியமான ஒன்றைப் பற்றி பேச விரும்புகிறேன் - நீரிழிவு மற்றும் உங்கள் கண்கள்.


நீங்கள் நீரிழிவு நோயுடன் வாழ்கிறீர்கள் என்றால், இது இரத்த சர்க்கரையை நிர்வகிப்பது மட்டுமல்ல. நீரிழிவு நோயானது நீரிழிவு ரெட்டினோபதிக்கு வழிவகுக்கும், இது கடுமையான பார்வைப் பிரச்சினைகளை ஏற்படுத்தும், குருட்டுத்தன்மையையும் கூட ஏற்படுத்தும். ஆனால் இதோ ஒரு நல்ல செய்தி: வழக்கமான கண் பரிசோதனைகள் மூலம், நீரிழிவு ரெட்டினோபதியை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து உங்கள் பார்வையைப் பாதுகாக்க உதவலாம்.

இன்று நவம்பர் 14ஆம் தேதி உலக நீரிழிவு தினம் என்பதால் கண் பரிசோதனைக்கு நேரம் ஒதுக்குமாறு உங்களை ஊக்குவிக்கிறேன். உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், அல்லது யாரையாவது அறிந்திருந்தால், உங்கள் பார்வையைப் பாதுகாக்க நடவடிக்கையை எடுக்கவும். ஒரு எளிய, வருடாந்திர கண் பரிசோதனை அனைத்து வித்தியாசத்தையும் ஏற்படுத்தும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Share this story