விஜய் சேதுபதி பட ஆடியோ வெளியிட்ட நடிகர் கமலஹாசன்.. படக்குழுவினருக்கு வாழ்த்து !

YaadhumOoreYaavarumKelir

 விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தின் ஆடியோவை நடிகர் கமலஹாசன் வெளியிட்டுள்ளார். 

YaadhumOoreYaavarumKelir

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. விஜய் சேதுபதி இந்த படத்தில் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இவர்களுடன் இயக்குனர் மோகன் ராஜா, விவேக், விஸ்வகுமார், கனிகா, ரித்விகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

YaadhumOoreYaavarumKelir

மறைந்த இயக்குனர் ஜனநாதனிடம் உதவி இயக்குனராக இருந்த வெங்கடகிருஷ்ணன் ரோஹந்த் இந்த படத்தை இயக்கியுள்ளார்.  நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தில் மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி வில்லனாக நடித்துள்ள இப்படத்தை சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

YaadhumOoreYaavarumKelir

கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்த படம் வரும் வரும் மே 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோவை நடிகர் கமலஹாசன் இன்று வெளியிட்டார். அப்போது படத்தின் வெற்றிக்கு படக்குழுவினருக்கு கமலஹாசன் வாழ்த்து தெரிவித்தார். இந்த ஆடியோ வெளியீட்டின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. 

Share this story