இலங்கை தமிழராக நடித்துள்ள விஜய் சேதுபதி.. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ டிரெய்லர் வெளியீடு !

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
முதல்முறையாக இந்த படத்தில் விஜய் சேதுபதி இரட்டை வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. மறைந்த இயக்குனர் ஜனநாதனிடம் உதவி இயக்குனராக இருந்த வெங்கடகிருஷ்ணன் ரோஹந்த் இந்த படத்தை இயக்கியுள்ளார். பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
இந்த படத்தில் மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இயக்குனர் மோகன் ராஜா, விவேக், விஸ்வகுமார், கனிகா, ரித்விகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தில் மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ரிலீசாகாமல் இருந்த இப்படம் வரும் மே 19-ஆம் தேதி வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து வெளியேறும் தமிழர்கள் படும் இன்னல்கள் குறித்து இந்த படத்தில் பேசப்பட்டுள்ளது. ஆக்ஷன் த்ரில்லரில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரெய்லர் படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
#YaadhumOoreYaavarumKelir Trailer Tomorrow
— CineScoop (@Cine_Scoop) May 14, 2023
??Rom-Thriller Revolving around Musicians #MeghaAkash, a Foreigner and their Love Interest Convict #VijaySethupathi ;SL Refugee & #MagizhThirumeni Probing the Murder
??#VenkataKrishnaRoghanth -#SPJananathan AD
??#NivasKPrasanna
??MAY19 pic.twitter.com/H0Rel63e4z